பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகளின் தாக்குதல் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

305

 

ரியா கடற்பகுதியில் ஏவுகணைகள் தங்கிய போர்கப்பலை ரஷியா நிறுத்திஉள்ளது. ஆபத்தாக விளங்கும் பகுதிகளை நோக்கி, நிலைகுலைய செய்யும் விதமாக தாக்குதல் நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என்று ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
201511251511319942_Russia-deploys-missile-cruiser-off-Syria-coast-ordered-to_SECVPF
பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகளின் தாக்குதல் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலகநாடுகளின் படை வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் உடனான போர் தீவிரம் அடைந்து உள்ளநிலையில், ரஷியா போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
உள்நாட்டு போரில் சிக்கிஉள்ள சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்தை பதவில் இருந்து நீக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறாது. அதேபோல் பஷார் அல் ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதில் துருக்கி அக்கறை காட்டி வருகிறது. ஆனால் ரஷியாவோ, பஷார் அல் ஆசாத்துக்கு தீவிர ஆதரவு அளித்து வருகிறது. சிரியாவில் அதிபர் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ரஷியா ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் ரஷியாவுக்கும், துருக்கிக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள், ரஷியாவின் போர் விமானம் ஒன்றை சிரியா எல்லையில் நேற்று சுட்டு வீழ்த்தியது. துருக்கி வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷியாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இச்சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரஷியா மறுப்பு
சிரியாவில் ரஷியாவின் விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்திய துருக்கிக்கு ரஷியா கண்டனம் தெரிவித்து உள்ளது. துருக்கியின் வான்பகுதிக்குள் ரஷியாவின் போர் விமானம் செல்லவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷிய பாதுகாப்பு உயர் அதிகாரி செர்ஜி ருடிஸ்கோய் பேசுகையில், துருக்கி சர்வதேச சட்டத்தை மீறிஉள்ளது. ரஷியாவின் விமானம் சிரியா பகுதியிலே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. துருக்கி எல்லையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் ரஷிய விமானம் விழுந்து உள்ளது. ரஷியா போர் விமானம் அத்துமீறி துருக்கியின் எல்லைக்குள் செல்லவில்லை. ஹமெய்மிம் விமானதள ரேடார் தகவலின்படி, துருக்கியின் விமானங்கள்தான் சிரியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ரஷியாவின் விமானம் மீது தாக்குதல் நடத்தியது என்பதை காட்டுகிறது என்று கூறிஉள்ளார்.
ரஷிய விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, துருக்கியின் விமானங்கள் ரஷியா விமானிகளுடன் எந்தஒரு தொடர்பும் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்துகிறது
ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா துருக்கிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இப்பிரச்சனையை விட்டுவிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், சிரியாவின் வான்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷியா திட்டமிட்டு உள்ளது. ரஷியா ராணுவம் ஏவுகணைகள் தாங்கிய போர் கப்பல்களை சிரியாவின் கடற்பகுதிக்கு அனுப்பிஉள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஆபத்தாக விளங்கும் பகுதிகளை நோக்கி, நிலைகுலைய செய்யும் விதமாக தாக்குதல் நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என்று ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
சிரியாவின் லாதாகியா விமானப்படை தளத்தில் S-400 பாதுகாப்பு ஏவுகணையை நிறுவதற்கும் ரஷியா தயாராகி உள்ளது.
துருக்கியின் உடனான ராணுவ தொடர்பு துண்டிப்பு
விமானம் சுடப்பட்டதை தொடர்ந்து துருக்கியின் உடனான ராணுவ தொடர்பை துண்டிப்பதாக ரஷியா அறிவித்து உள்ளது. துருக்கி உடன் இணைந்து பணியாற்றுவதில் அனைத்து ஒத்துழைப்பையும் ரத்துசெய்ய ரஷியா முன்வந்து உள்ளது.
“துருக்கி உடனான அனைத்து ராணுவ ஒப்பந்தங்களும் நிராகரிக்கப்படும்,” என்று ருடிஸ்கோய் கூறிஉள்ளார்.
ரஷிய விமானிகளை துருக்கி தொடர்பு கொள்ளவில்லை என்ற ரஷியாவின் குற்றச்சாட்டை துருக்கி மறுத்து உள்ளது.
குற்றச்சாட்டு நிராகரிப்பு
ரஷிய விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் 10-முறை எச்சரிக்கை விடுத்தோம்… துருக்கியின் எல்லையை தாண்டிய 5 நிமிடங்கள் எச்சரிக்கையான நீடித்தது என்று துருக்கி தெரிவித்து உள்ளது.
“இந்த சம்பவத்தை நிராகரிக்க எங்களால் முடிந்தவரையில் நடவடிக்கை எடுத்தோம் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. துருக்கி தனது எல்லைக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று உரிமைக்கு எல்லோரும் மதிப்பு அளிக்கவேண்டும்… நாங்கள் வைத்து உள்ள தரவுகள் அனைத்தும் மிகவும் தெளிவாக உள்ளது. எங்களுடைய எல்லையை இரண்டு விமானங்கள் நெருங்கியது, நாங்கள் அவற்றை எச்சரித்தோம் ஆனால் அவை எங்களை நெருங்கியது, பல்வேறு முறை துருக்கியின் எல்லைப் பகுதியில் அத்துமீறல் நடந்து உள்ளதை கண்டுபிடித்து உள்ளோம். அவர்கள் எல்லாம் தெரிந்துக் கொண்டே அத்துமீறிஉள்ளனர்.” என்று துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் நேட்டோ படையும் துருக்கிக்கே ஆதரவை தெரிவித்து உள்ளது.
துருக்கி மற்றும் ரஷியா இடையில் ஏற்பட்டு இப்பிரச்சனையினால் அமெரிக்காவின் நடவடிக்கையில் எந்தஒரு பாதிப்பும் கிடையாது என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிரியாவில் திட்டமிட்டபடி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.
SHARE