பாலியல் அடிமைகளாக சிறுமிகளை விற்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்

286

 

 isis-terrorist

கன்கே- பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ள இளம் பெண்கள், சிறுமிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செல்போன் செயலிகள் மூலம் விளம்பரப்படுத்தி பாலியல் அடி மைகளாக விற்று வரும் அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளன. வடக்கு இராக்கில் யாஜிதி இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் கடந்த 2014 ஆகஸ்டில் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் அங்கிருந்த 3,000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். உள்ளூரை சேர்ந்த அரபு மற்றும் குர்தீஷ் போராளிகள் பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 134 பெண்களை ஒரே மாதத்தில் மீட்டு வந்தனர். இதனால் உஷாரடைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் குர்தீஷ் போராளி களை கொன்று குவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து பெண் களை மீட்கும் நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன.

அதே சமயம் அரசு படைகளின் தீவிர தாக்குதலால் கடும் பின்னடை வை சந்தித்து வரும் ஐஎஸ் தீவிர வாதிகள் தங்களது நிதிதேவைக்காக தற்போது பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ள பெண்களை பாலியல் அடிமைகளாக விற்று வருகின்றனர். இதற்காக அவர்கள் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செல்போன் செயலிகள் மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர். அண்மையில் 12 வயது சிறுமியை ரூ.8 லட்சம் வரை விலை கொடுத்து வாங்க பலர் போட்டி போட்டிருப்பதாகவும் எனவே அவர் விரைவில் விற்கபடுவார் என்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட விளம்பரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் இராக் நல அமைப்பு நிறுவனர் மிர்சா டனாய் கூறும் போது, ‘‘ஒவ்வொரு பெண்களை யும் தீவிரவாதிகள் பதிவு செய்து வைத்துள்ளனர்.

ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளுக்கும் அந்த பெண் களை பற்றிய தகவல் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்களால் எளிதில் தப்பித்து செல்ல முடிவதில்லை’’ என்றார். அண்மையில் லாமியா அஜி பஷர் என்ற இளம் பெண் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து எப்படியோ தப்பித்து வந்தார். ஆனால் நில கண்ணிவெடியில் சிக்கியதில் அவரது வலது கண் பார்வை பறிபோனது. அவருடன் வந்த 8 வயது அல்மாஸ் என்ற சிறுமியும் கேத்ரின் என்ற இளம் பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல் ஐஎஸ் தீவிரவாதி களிடம் இருந்து தப்பி பிழைத்த நாடியா மவுரத் என்ற பெண் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன் ஆஜராகி யாஜிதி பெண்களை காப்பாற்ற சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

SHARE