பிரதமரை குண்டுக்கட்டாக தூக்கி வீசிய எம்.பி: உக்ரைன் பாராளுமன்றத்தில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

319

 

உக்ரைன் நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திக்கொண்டு இருந்த அந்நாட்டு பிரதமரை குண்டுக்கட்டாக தூக்கி வீசிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகரான கிவ்வில் அமைத்துள்ள அந்நாட்டு பாராளுமன்றமன்றத்தில் சற்று முன்னர் பிரதமர் Arseny Yatsenyuk முக்கிய உரை ஒன்றை நிகழ்த்திக்கொண்டு இருந்தார்.

அப்போது, கையில் பூச்செண்டுடன் அமைதியாக நடந்துச்சென்ற Oleg Barna என்ற பெயருடைய ஜனாதிபதிக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர், பிரதமரிடம் பூச்செண்டு கொடுத்துவிட்டு அவரை பிடித்து இழுக்க முயற்சி செய்கிறார்.

பிரதமர் அங்கிருந்த நகராமல் நிற்கவே ஆத்திரம் அடைந்த பாராளுமன்ற உறுப்பினர் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அருகில் வீசியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற எம்.பிக்கள் விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர்.

பின்னர், பிரதமருக்கு ஆதரவான எம்.பிக்கள் அவர் மீது பாய்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் பாராளுமன்றம் தள்ளிவைக்கப்பட்டதுடன் அங்கு பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிற்கு பேசிய பிரதமர், ‘இதற்காக நான் அவமானப்படவில்லை. ஆனால், பாராளுமன்றத்தில் சில மிருகங்கள் இருக்கின்றன. அவர்கள் அனைவரையும் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என பேசியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியான Petro Poroshenko என்பவரின் கட்சி எம்.பிக்களுக்கும், தற்போது தாக்குதலுக்கு உள்ளான பிரதமரின் கட்சி எம்.பிக்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததால் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளான பிரதமர் பதவியில் நீடிக்க கூடாது என்பதற்காகவும் இந்த தாக்குதல் முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது.

 

SHARE