பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது : ரா அதிகாரி சுப்ரமணியம் தகவல்

310
ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது அவர் பிரபாகரனைப் பற்றி பரபரப்பான தகவல்களை அளித்தார்.
அதில் அவர் சில கேள்விகளை எழுப்பினார்.
“இலங்கை காட்டியது பிரபாகரன் உடல்தான் எனில், ஏன் முறையான இறப்பு சான்றிதழ் மற்றும் மரபணு பரிசோதனை சான்றிதழ் வழங்கவில்லை?
இலங்கையில் மரபணு சோதனை செய்யும் ஆய்வுக்கூடமே இல்லை. இந்தியாவிடம் பிரபாகரன் மரணம் பற்றி இலங்கை அரசு அளித்தது ஒரு அறிக்கை மட்டுமே. இறப்பு சான்றிதழ் அல்ல. ஊடகங்களில் காட்டப்பட்ட உடலில் இருந்து மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்ட போதும், இலங்கை அதை இந்தியாவிடம் கொடுக்கவில்லை. அதேபோல் அந்த மரபணு பற்றிய முடிவுகளை இலங்கை ஏன் வெளியிடவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் “பிரபாகரனின் மனைவி மற்றும் மகளை, இறுதி யுத்தத்தின் சில நாட்களுக்கு முன்னரே இலங்கை ராணுவம் வெள்ளை வேனில் கடத்தி சென்று படுகொலை செய்தனர்.
இந்திய தரப்பிலிருந்து, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுமாறு பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. ஆனால், ஆயுதங்களை ஒப்படைக்காமல் தொடர்ந்து போரிடுமாறு நெடுமாறன்,வைகோ ஆகியோர் பிரபாகரனிடம் கூறினர். அதனால்தான் பிரபாகரன் தோல்வி அடைந்தார். பிரபாகரன் எங்கேயாவது உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது”
என்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
SHARE