பிரான்ஸ் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயன நஞ்சை கலக்க ஐ.எஸ் தீவிரவாதிகள்

302

 

பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு

kemikal

பலப்படுத்தப்பட்டுள்ளது.பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.இந்த பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுவிட்டதால், ஐ.எஸ் தீவிரவாதிகள் இதனை பயன்படுத்தி நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் நீர்நிலைகளில் மக்களை கொல்லும் இரசாயனங்களை கலக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் Manuel Vall கூறுகையில், தற்போதைய நிலையில், எதையும் நம்மால் நிராகரித்து சிந்திக்க இயலாது, எனவே தீவிரவாதிகள் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயனங்களை கலப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.இதன் காரணமாக, பாரீஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.முக்கிய உயரதிகாரிகள் தவிர இதர பணியாளர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

 

SHARE