பிரித்தானியாவில் சிறுநீரக விற்பனையில் இலங்கையரா…..

323

பிரித்தானிய சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் இலங்கைக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரஜைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இலங்கையர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Body1

வறியர்வகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

1200 பவுண்ட்களுக்குக் கூட தங்களது சிறுநீரகங்களை விறப்னை செய்ய தயாராக சிலர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இடைத்தரகர்கள் பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான மொத்த செலவாக 75000 ஸ்ரெலிங் பவுண்ட்களை அறவீடு செய்வதாக பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்தி சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இலங்கை முகவர் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

பிரித்தானியாவில் சிறுநீரக உறுப்பினை கொள்வனவு செய்வதும் விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும், இந்தக் குற்றச் செயலுக்காக மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்காக சிறுநீரகங்களை பெற்றுக் கொள்ள சட்ட சிக்கலற்ற நாடுகளுக்கு சென்று பிரித்தானியர்கள் பெருமளவு பணத்தை கெர்டுத்து சிகிச்சை பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE