பிரித்தானியாவில் 25 மில்லியன் பவுண்ட் மோசடி

505
பிரித்தானியாவில் புலம் பெயர்ந்த நபர் ஒருவர் தமது உறவினருடன் இணைந்து 25 மில்லியன் பவுண்ட் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் கடந்த 1998 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர்கள் 50 வயதான Emmanuel மற்றும் 40 வயதான Eduwu.

நைஜீரியாவை சேர்ந்த இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே மரணமடைந்துள்ள போர்த்துகீசிய நபர் ஒருவரின் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த போலி அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கி கணக்கை துவங்கி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இணையத்தில் இவர்கள் உருவாக்கிய பல்வேறு மோசடிகளை நம்பி ஜேர்மனி, நார்வே, சுவிட்சர்லாந்த், கனடா, ஐக்கிய அமீரகம் மற்றும் அமெரிக்கா மக்கள் ஏமாந்துள்ளனர்.

இவர்களது பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்தும் 4 மில்லியன் பவுண்ட் வரை கைப்பற்றியுள்ளதை விசாரணை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இவர்கள் மீது சதி மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டது, பல்வேறு தரப்பினருடன் பண மோசடி ஒப்பந்தம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சுமார் 55 நாடுகளில் உள்ள மக்களை ஏமாற்றி 25 மில்லியன் பவுண்ட் சம்பாதித்த இந்த நபர்கள் இருவருக்கும் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்துள்ளனர்.

SHARE