பிரித்தானியா ஆபத்தானது பீரிஸ்

304

peiris

சிறிலங்கா ஆயுதப்படைகளை தரமுயர்த்துவதற்கு, 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள பிரித்தானியா, இதனைக் கண்காணிக்க புதுடெல்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமிக்கவுள்ளமை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“மோல்டாவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சிறிலங்காவின் ஆயுதப் படைகளை மறுசீரமைக்க 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

தனது நாட்டின் ஆயுதப்படைகளை மறுசீரமைப்பதற்கு, சுயமரியாதையுள்ள ஒரு அரசாங்கம், வேறு எந்தவொரு நாட்டினதும் இத்தகைய உதவியை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

ஆயுதப்படைகளின் மறுசீரமைப்பு உள்நாட்டுக்குள் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, வெளிநாட்டில் இருந்து அல்ல.

தனது சொந்த ஆயுதப்படைகளுக்கான தேவைகளுக்காக ஒரு அரசாங்கமே செலவிட வேண்டும்.

கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படாமல், ஆயுதப் படைகளை மறுசீரமைப்பதற்கு வேறு நாடுகளிடம் இருந்து நிதியை ஏற்றுக் கொள்வது மிகவும் ஆபத்தானது.

இந்த நிதியை வழங்கவுள்ள பிரித்தானியா, எமது ஆயுதப்படைகளை மறுசீரமைப்பதற்கு இந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கண்காணிப்பதற்கு, புதுடெல்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE