பிரித்தானியா குடிமக்களின் 10 மோசமான பழக்கவழக்கங்கள்

297

 

உலக வல்லரசு நாடுகளின் ஒன்றான பிரித்தானியா பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் இன்றளவும் பின்பற்றி வரும் 10 மோசமான பழக்கவழக்கங்கள் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Ipsos MORI என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் அந்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் குடிமக்கள் இன்றளவும் 10 மோசமான பழக்கவழக்கங்களை பின்பற்றி வருவதாக தெரியவந்துள்ளது.

  • பிரித்தானிய குடிமக்கள் மது அருந்துவதில் மிகவும் ஆர்வம் உடையவர்கள். பிரித்தானிய நாட்டு சட்டப்படி 5 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கூட மது அருந்த அனுமதி உள்ளதால், அந்நாட்டில் சுமார் 42 சதவிகிதத்தினர் அளவுக்கு அதிகமாக மது அருந்து வருகின்றனர்.
  • உலகில் உள்ள பல நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்தாலும் கூட, பிரித்தானியாவில் உள்ள 37 சதவிகிதத்தினருக்கு பிற நாடுகளின் கலாச்சாரங்களை பற்றி அறியாமலே உள்ளனர்.
  • சாதாரண விடயமாக இருந்தாலும் கூட, அவற்றைப் பற்றி அடிக்கடி குறை மற்றும் புகார்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு சுமார் 27 சதவிகித மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
  • பிரித்தானியாவில் உள்ள பிற சமூகத்தினரை சுமார் 22 சதவிகித பிரித்தானிய குடிமக்கள் சகித்து கொள்வது கிடையாது. இவர்களிடம் நன்றாக பழகுவதும் இல்லை.
  • வெளித்தோற்றத்தில் சுறுசுறுப்பானவர்களாக காட்சியளித்தாலும், பிரித்தானிய நாட்டில் இன்றளவும் சுமார் 19 சதவிகிதத்தினர் சோம்பேறிகளாகவே இருந்து வருகின்றனர்.
  • உடல்பருமன் குறைபாடு உள்ள நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாக திகழும் நேரத்தில் அந்நாட்டில் உள்ள 18 சதவிகிதத்தினருக்கு எவ்வகை உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை காப்பது என்ற நல்ல பழக்கம் கிடையாது.
  • பிரித்தானிய குடிமக்களில் 17 சதவிகிதத்தினருக்கு அவநம்பிக்கை அதிகமாகவே உள்ளது. எச்செயலை செய்தாலும், ‘இது தோல்வியில் தான் முடியும்’ என அவர்களாகவே தீர்மானித்து அச்செயல்களை கைவிட்டு விடுவார்கள்.
  • ஆங்கிலேயேர்கள் பொது இடங்களில் அதிகமாக சிரிக்கவும், அழவும் மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். இதேபோல், சுமார் 14 சதவிகித்தினர் முரட்டு சுபாங்கள் கொண்டவர்களாக உள்ளனர்.
  • குடிமக்களுக்கு தேசப்பற்று இருப்பது அவசியம் தான். ஆனால், பிரித்தானியாவில் 11 சதவிகித மக்கள் வெறித்தனமான தேசியவாத கொள்கைகளை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.
  • இறுதியாக, அமெரிக்கர்கள் அடிக்கடி குளிக்காமல் இருப்பது போல் பிரித்தானியாவில் சுமார் 8 சதவிகித மக்கள் தங்களுடைய பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கமே கிடையாது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
SHARE