பிரேசிலில் வேகமாக பரவும் ஜிக்கா வைரஸ்

267
பிரேசில் நாட்டில் சிறிய தலையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் சமீப காலமாக சிறிய தலை மற்றும் மூளையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்நாட்டில் வேகமாக பரவி வரும் ஜிக்கா வைரஸ்(Zika Virus) காரணமாகவே குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கொசு மூலமாக பரவும் இந்த நோய் முதன் முதலில் கடந்த 1947ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் கடந்த ஆண்டுதான் பிரேஸிலில் பரவியது. எவ்வாறு இந்த வைரஸ் அமெரிக்க நாடுகளுக்கு பரவியது என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனினும் இந்த நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதுமே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவரும் கொசு கடியில் இருந்து தங்களை காத்துக்கொள்ளும்படி பிரேஸில் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

டெங்கு, சிக்கன்குன்யா ஆகியவற்றை பரப்பும் ஏடிஸ் ஏகிப்தி (Aedes aegypti) கொசு மூலமே ஜிக்கா வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3,893 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பிரேஸில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேஸிலை போல் கொலொம்பியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவுவதால் பெண்கள் அடுத்த 8 மாதங்களுக்கு கர்ப்பம் ஆவதை தவிர்க்கும்படி அந்நாட்டு அரசாங்கள் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE