பிறக்கும் குழந்தைகளுக்கும் போரின் பாதிப்புக்கள்!- சபையில் செல்வம் பா.உ

251

 

 

தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கும் போரின் பாதிப்புக்கள் ஏற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் சுற்றாடல் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

எமது நாட்டில் போர் இடம்பெற்றது. தற்போதும் வடக்கு கிழக்கில் போரின் பாதிப்புக்களை மக்கள் உணர்கின்றனர்.

சில தடை செய்யப்பட்ட பொருட்கள் போரின் போது பயன்படுத்தப்பட் காரணத்தினால் இன்று பிறக்கும் குழந்தைகள் கூட உபாதைகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் எமக்கு மிகவும் வேதனையான ஓர் நிலைமை ஏற்படுகின்றது.எறிகணைத் தாக்குதல்களினால் எமது மக்களுக்கு உபாதைகள் அதிகரித்துள்ளன.

உடலில் எறிகணைத் துண்டுகளுடன் இன்றும் வடக்கு கிழக்கில் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

காலநிலை அனர்த்தங்களின் போது அவற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.

பாரிஸ் உடன்படிக்கையின் ஊடாக நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் உடன்படிக்கை மிகவும் அவசியமானது!- சிவமோகன் பா.உ.

சுற்றாடல் பாதுகாப்பு குறித்த பாரிஸ் உடன்படிக்கை மிகவும் அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

உலகம் வெப்பமாதலை தடுத்து நிறுத்த பரிஸ் உடன்படிக்கை மிகவும் சிறந்த ஓர் வழியாக அமையும்.

2020ம் ஆண்டளவில் பல்வேறு விடயங்களை பூர்த்தி செய்து கொள்வதாக பரிஸ் உடன்படிக்கையில் இணங்கப்பட்டுள்ளது.

வடக்கில் மக்களின் காணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடியதாக கூறும் படையினருக்கு, தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்க எவ்வித அவசியமும் இல்லாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE