பில் கிளிண்டனை அடித்து கொடுமைப்படுத்தினாரா ஹிலாரி கிளிண்டன். புத்தகத்தால் வெடிக்கும் சர்ச்சை

294
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன் அவரது கணவர் பில் கிளிண்டனை அடித்து கொடுமைப்படுத்தியதாக புத்தகத்தில் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் அரசியல் ஆலோசகரான ரோஜர் ஸ்டோன் எழுதியுள்ள தி கிளிண்டன் வார் ஒன் வுமன்(The Clintons War on Women) புத்தகத்தால் ஹிலாரிக்கு மாபெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தில் ஹிலாரியை விமர்சனம் செய்துள்ள ரோஜர், முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டனை ஹிலாரி கிளிண்டன் பல முறை பொருட்களை கொண்டு அடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது பணியாளர்களிடம் ஹிலாரி மூர்க்கமாகவே நடந்து கொள்வார் என்றும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் அமெரிக்க அரசியல் வட்டத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE