பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைத்துக்கொண்டு நீங்கள் இங்கு தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றீர்கள் என கடுமையாக சாடினார்-அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

324

 

இலங்கையில் இன்றுவரை இலங்கை சமூகங்களுக்கிடையில் நல்லிணகத்தினை ஏற்படுத்துவதில்  தோல்வியே .

1

இந்நிலையில் தற்போது  மேலும் ஒரு சர்ச்சையாக மீள்குடியேற்றம் தொடர்பில் மத்திய  அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய செயலணி தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

புதிய செயலணி

கடந்த 5 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன்  மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு செயலணி நியமிக்கப்பட்டது.

குறிப்பாக வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பிலே இச்செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இம்மீள்குடியேற்ற செயலணியானது வடக்கில் சிங்கள குடியேற்றத்திற்கான மறைமுக திட்டம் என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

நேரடி நிகழ்ச்சியில்  மோதிக்கொள்ளும் காணொளி…

 

குறித்த செயலணியில் மத்திய அரசாங்க அலுவலர்கள் ஆறு பேரும் வட மாகாண பிரதம செயலாளரும் வடமேல் மாகாண பிரதம செயலாளரும் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளனர்.

குறித்த செயலணியின் மீள்குடியேற்றம் பற்றிய நிகழ்ச்சி நிரலில் பாரம்பரிய சிங்கள கிராமங்களும் உள்ளடக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்டமும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுந்துள்ள சர்ச்சை

குறிப்பாக இச்செயற்பாடு குறித்து வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

இச்செயலணி புதிய வகையில் வடக்கில் சிங்கள குடியேற்றம் ஏற்படுத்துவதற்கான முயற்சி என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக பெயருக்கு வட மாகாணசபை பிரதம செயலாளரை உள்ளடக்கிய மத்திய அரசாங்கமே இவ்வாறான காரியங்களைக் முன்னெடுத்து செல்ல உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் வட மாகாண மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும். தம்மிடம் கேட்காமல் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறுவது பொது மக்களுக்குப் பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

மத்திய அரசாங்கத்தின் உதாசீனமும் தான்தோன்றித்தனமும் கண்டனத்திற்கு உரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் மோதல்…. 

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில்   தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் மிக மோசமாக, நேரடி நிகழ்ச்சி என்பதனை மறந்து நடந்துக்கொண்ட விதம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  இந்நிகழ்ச்சியொன்றில்  வட மாகாணத்தில் மீள்குடியேற்றும் அதிகாரம் மாகாண சபைக்கு இருப்பதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் கூற்றை பற்றி தொடுக்கப்பட்ட வினா தொடர்பில் பதிலளிக்க முற்பட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வட மாகாண சபை வடக்கு முஸ்லீம்களுக்கு ஒரு கழிவறையும் கட்டி தரவில்லை என மிக கடுமையான விவாதத்தில் ஈடுப்பட்டார்.

இதன்போது இதற்கு பதிலளித்த சுரேஸ் பிரேமசந்திரன் வட மாகாண சபை அனுமதி பெறாத எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறி கடும் வாக்குவாதம் செய்ய, நிலைமை முற்றி ஒரு கட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமிழ் மக்களை சுட்டதே நீங்கள்தான், அவர்களை அழித்ததும் நீங்கள் தான், பொய் சொல்ல வேண்டாம் எனவும் கூறி, உங்களது பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைத்துக்கொண்டு நீங்கள் இங்கு தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றீர்கள் என கடுமையாக சாடினார்.

இந்நிலையில் மீள்குடியேற்றம் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய செயலணி வடக்கு மக்களின் நலன்கருதியா? அல்லது மறைமுகமாக இடம்பெறும் சிங்கள குடியேற்றமா? விரைவில் அனைத்து உண்மைகளும் அம்பலமாகும்……

உயிர்களை இழந்து தவிக்கும் தமிழ் மக்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் இழந்துக்கொண்டே இருக்கின்றார்கள் என்பதே நிஜம்….. தமிழ் மக்களை வைத்து அரசியலை தவிர வேறொன்றும் இங்கு இடம்பெறவில்லை என்பதே உண்மை.

 

SHARE