சேலம்: சேலம் மாவட்ட சுகாதார பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், பொது சுகாதாரத்துறை மாநில இணை இயக்குனர் சேகர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களில் 1.5 கோடி பேர் புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். புகையிலை பழக்கத்தில் இந்தியா 4வது இடம் வகிக்கிறது.
பீடி, சிகரெட், பான்மசாலா உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. இதில் அதிர்ச்சி தரும் விஷயமாக இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவோரில் 12 சதவீதம் பேர் பெண்கள். இப்பழக்கத்தால் ஆணுக்கும், பெண்ணுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும். புகையிலை பயன்பாட்டினால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு 90 பேர் இறக்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 2200 பேர் இறக்கின்றனர்.