புதிய நட்சத்திரத்துக்கு ரொனால்டோ பெயர்!

363
கால்பந்து போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் ரொனால்டோவை கவுரப்படுத்தும் வகையில் வான்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நட்சத்திர கூட்டத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுமார் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த நட்சத்திர கூட்டத்தை போர்ச்சுக்கலை சேர்ந்த விண்வெளி ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.

‘காஸ்மோஸ் ரெட்ஷிப்ட்’ அல்லது சிஆர்- 7 என்றும் இந்த விண்மீனுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே வயதை ஒத்த நட்சத்திரங்களுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாக ஒளிரும் தன்மையுடயது.

சிஆர் என்பது கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பதை குறிக்கும்; 7 என்பது ரொனால்டோ அணிந்து விளையாடும் ஜெர்சி எண் ஆகும். எனவே சிஆர் 7 என்று இந்த விண்மீன் கூட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்த குழுவின் தலைவர் டேவிட் சோர்பல், லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஆவார்.

SHARE