புதிய முயற்சியில் இங்கிலாந்து.. டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்குமாறு பரிந்துரை

773
ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

அப்போது டெஸ்ட் போட்டியை 4 நாட்களில் நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் கொலின் கிரேவஸ் பரிந்துரைத்துள்ளார்.

4 நாட்களாக நடத்த திட்டமிட்டு இருக்கும் டெஸ்டில் தினசரி 110 ஓவர் வீச பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4 தினங்களில் 440 ஓவர் வீசப்பட்டு விடும்.

தற்போது தினசரி 90 ஓவர் வீசப்படுகிறது. 5 தினங்களில் 450 ஓவர் வீசப்படும். இதனால் 10 ஓவர் தான் குறைந்த நிலையில் இருக்கும்.

இங்கிலாந்தின் இந்த திட்டத்தை இந்திய கிரிக்கெட் சபை ஆதரிக்காது என்று கூறப்படுகிறது.

5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி 1876 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒருநாள் போட்டி 1971ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. டி20 போட்டி 2005இல் கொண்டு வரப்பட்டது.

டி20 போட்டியின் தாக்கம் காரணமாக டெஸ்ட் போட்டி பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது வருகிறது.

இதனால் டெஸ்ட் போட்டியை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பகல்-இரவாக டெஸ்டை நடத்தலாம் என்ற யோசனையும் இருந்து வருகிறது.

SHARE