புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாலியல் வன்முறை: 1,000 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார்

269
ஜேர்மனியில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சுமார் 1,000 ஆண்கள் மீது அந்நாட்டு பொலிசார் வழக்கு பதிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான Cologne நகரில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள ரயில் நிலையத்திற்கு முன்பாக கூடியுள்ளனர்.

அப்போது, இந்த கூட்டத்திற்குள் நுழைந்த சுமார் 1,000 நபர்கள் அடங்கிய குழுவினர் அங்குள்ள பெண்கள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்தியுள்ளனர்.

பெண்களை ஆபாசமாக தொடுவது, உடைகளை கிழிப்பது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டனர்.

பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான சுமார் 60 பெண்கள் உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரை கூறிய பெண்களில் ஒருவர் தன்னை சுமார் 100 முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், 200 மீற்றர் தொலைவு வரை விரட்டி வந்து கொடுமை செய்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களில் ஒருவரை நபர்களில் சிலர் கற்பழிக்க முயன்றதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி ஒருவர், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் அரபு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், பெண்களிடம் சிலர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும், கூட்டத்தினர் மீது பட்டாசுகளை கொளுத்தி வீசியுள்ளதும் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது உள்நாட்டு வாலிபர்களாக இருந்தாலும் விரைவில் நடவடிக்கை எடுப்போம் என அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE