பெங்களூரின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? விராட் கோஹ்லி விளக்கம்

373
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி அடுத்தடுத்த தோல்வியை தழுவி வருவது தொடர்பாக அந்த அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

5வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும். அதே சமயம் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 3வது தோல்வியை சந்தித்துள்ளது.

இது பற்றி பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், தொடர் தோல்வி எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

தனிப்பட்ட வீரரின் சிறப்பான ஆட்டத்தை விட நல்ல இணை ஆட்டம் அமைய வேண்டியது முக்கியமானதாகும். அது தான் எங்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.

நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படுவதில் தவறி விட்டோம். இந்த குறையை போக்க நாங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் எங்கள் வீரர்கள் இன்னும் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும் என்றும், குறிப்பாக சொந்த ஊரில் அதிரடியாக செயல்பட வேண்டும் எனவும் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

SHARE