பெண்ணுக்கு மரண தண்டனை..! திகைப்பை ஏற்படுத்திய நிமிடங்கள்.

312

ஐக்கிய அரபு இராச்சியத்தில் திகைப்பை ஏற்படுத்திய சம்பவம். சம்பந்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரக பெண்ணுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமீரகத்தில் உள்ள அபுதாபியைச் சேர்ந்தவர் அல்-ஹாஸ்மெனி. 31 வயது பெண்ணான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அபுதாபி நகர வணிக வளாகம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த மழலையர் பள்ளி ஆசிரியை இபோல்யா ரியான் என்பவரை கத்தியால் குத்தி கொன்றார்.

முன்னதாக அவர் அமெரிக்க டாக்டர் ஒருவரின் வீட்டிலும் குண்டு வைத்தார். அந்த குண்டு வெடிப்பதற்கு முன்பாகவே கண்டுபிடித்து செயல் இழக்க வைக்கப்பட்டது.

இந்த 2 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு விசாரணையின் போது, தான் மனநிலை பாதிக்கப்பட்டதால் இந்த செயல்களில் ஈடுபட்டதாக அல்-ஹாஸ்மெனி கூறினார்.

ஆனால் அவர் மனநிலை பாதிக்கப்படாதவர் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து தீவிரவாதி போல் செயல்பட்டதாக கூறி அல்-ஹாஸ்மெனிக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி அவருக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

Dath Girl

SHARE