பெண்ணை வர்ணித்து வேலையை இழந்த நபர்

311
பிரித்தானியாவில் Domino Pizza உணவகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் தனது வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவின் Exeter நகரை சேர்ந்த Imogen Groome(22) என்ற பெண், Domino உணவகத்தில் இருந்து இரவு நேரத்தில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.

பீட்சாவை வினியோகம் செய்யும் அந்த ஓட்டுநர், பீட்சாவை அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார்.

பின்னர், அப்பெண்ணின் நம்பருக்கு நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பயுள்ளார், அதற்கு அப்பெண் நன்றி என்று கூறியுள்ளார்.

பின்னர், இனிய இரவு, எனது இரவை இனிமையாக்குங்கள் என்று கூறியுள்ளார், அதற்கு அப்பெண், நீங்கள் என்னை 30 நிமிடங்கள் தான் பார்த்திருப்பீர்கள், அதற்குள் என்ன? என்று கிண்டலாக பதில் அனுப்பியுள்ளார்.

அந்த நபரும், நீங்கள் அழகான பெண், நான் எனது வாழ்க்கையை காதலிக்கிறேன் என்று குறுஞ்செய்திகளை அனுப்ப, அப்பெண்ணும், நீங்கள் பணிநேரத்தில் நன்றாக பொழுதை கழிக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு இந்நபர் நன்றி என்று கூறிவிட்டு, காலையிலும் இனிய காலை வணக்கம் என்று குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்துள்ளார்.

இதனால் எரிச்சலடைந்த அப்பெண், உணவகத்தில் சென்று புகார் அளித்துள்ளதோடு மட்டுமல்லாமல், அந்த குறுஞ்செய்திகளை பிரிண்ட் ஷாட் எடுத்து காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரிய உணவகம், அந்த நபரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.

SHARE