பெண் ஊழியரை வேலையை விட்டு நீக்க முயற்சி – இழப்பீடு வழங்க நீதிபதி ஆணை

281
பிரித்தானியாவில் பெண் ஊழியரை வேலையை விட்டு நீக்க முயற்சித்த செயலுக்காக 3.2 மில்லியன் பவுண்ட் இழப்பீடு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் ரஷ்யா வங்கி ஒன்றில் பங்கு விற்பனை குழுவில் பணியாற்றி வந்துள்ளார் 34 வயதான Svetlana Lokhova என்பவர்.

இவரது முன்னாள் மேலாளர்களான David Longmuir, Piotr Tymula ஆகியோர் இவரை வேலையை விட்டு நீக்கும் பொருட்டு நெருக்கடி அளித்துள்ளனர்.

அலுவலக நேரங்களில் இவருக்கு அதிக நெருக்கடி வழங்கியும் தொடர்ந்து தொல்லை தந்தும் வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த Lokhova அலுவலகத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் கடுமையான மன உளைச்சலுக்கும் தள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே வேலையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவர், உடனடியாக நீதிமன்றத்தில் இதுகுறித்தும் தமது மேலாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவரை வேண்டும் என்றே வேலையை விட்டு நீக்கியுள்ளதை உறுதி செய்துள்ளது.

இதனையடுத்து இது நாள் வரையான வேலை நாட்களை கருத்தில் கொண்டு அவருக்கு இழப்பீடு தொகையாக 3.2 மில்லியன் பவுண்ட் வழங்க ஆணையிட்டுள்ளது.

SHARE