பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை ரத்து : மாலத்தீவில் பரபரப்பு

301
ஆடம்பரமான தேனிலவு கொண்டாட்டங்களுக்கு பேர் போன சுற்றுலா மையமான மாலத்தீவுகளில் யாரும் எதிர்பார்த்திராத விதத்தில் கெமானாஃபுஷி தீவில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஒருவரால் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பில் நீதி நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மாலத்தீவுகளில் அண்மையில் ஏற்பட்ட சட்ட மாற்றங்கள், முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகள் தொடர்பில் பரந்துபட்ட அணுகுமுறையுடன் கூடிய பார்வையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மாலத்தீவுகளில் திருமணத்துக்கு வெளியிலான பாலுறவுக்கு உள்ள தடை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது
SHARE