பேருந்தில் பெண்ணை தாறுமாறாக அடித்து உதைத்த மனிதர் (வீடியோ இணைப்பு)

270
அமெரிக்காவில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் மீது ஆண் தாக்குதல் நடத்தும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கிழக்கு கிளவ்லெண்ட் பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.பேருந்தில் நெரிசல் அதிகமாக இருந்ததால் பயணிகள் நின்றபடி பயணம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஆண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் அவரை கண்ணத்தில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆண் பெண்ணை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் அப்பெண்மணியின் முகம், உதடு ஆகிய பகுதியில் இருந்து இரத்தம் வழிய தொடங்கியது.

மேலும் அவரது கை விரல்களும் முறிந்துபோனதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் தாக்குதல் நடத்தியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE