பொருளாதார மத்திய நிலைய சர்ச்சை; மாவை தலைமையில் குழு ஓமந்தைக்கு விஜயம்

283

 

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தை பிரதேசத்தில் அமைப்பதற்கு உகந்ததாக அமையுமா என்பது தொடர்பில் ஆராய்வு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

May-01

கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினரே இன்று சனிக்கிழமை ஓமந்தை பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றதோடு, இந்த விவகாரத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே கருத்துக்களைப் பெற்று பெரும்பான்மை அடிப்படையில் இறுதிமுடிவு எடுக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே உத்தேச பொருளாதார மத்திய நிலையத்திற்காக ஓமந்தையில் அடையாளம் காணப்பட்டுள்ள காணியை பார்வையிடுவதற்காக மாவை சேனாதிராஜா எம்.பி தலைமையிலான குழுவொன்று அங்கு செல்லவுள்ளது.

 

 

SHARE