பொலிசார் கண்முன்னே தீக்குளித்த நபர்: காரணம் என்ன?

282

download

 

சீனாவில் ரிக்‌ஷா ஓட்டி பிழைத்துவரும் நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் சிக்கியதில் மனமுடைந்து தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சியாங் பகுதியில் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பை நடத்தி வந்துள்ளார் குவாவ்.

சம்பவத்தன்று, அப்பகுதியில் உள்ள திரையரங்கின் அருகே பயணிகளை எதிர்பார்த்து குவாவ் காத்திருந்த்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த பொலிசார் இவரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதில் அவருக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

குவாவிடம் உரிய வாகன உரிமம் இல்லை என அறிந்த பொலிசார், அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி ஓட்டியதால் பொலிசார் வாகனத்தை பறிமுதல் செய்யலாம் என்ற நிலையில், தமது குடும்ப சூழலை நினைத்து மனமுடைந்த குவாவ், திடீரென தமக்கு தாமே நெருப்பு வைத்து தீ குளித்துள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த பொலிசார் மற்றும் அப்பகுதிமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குவாவ், தமது வாகனத்தை அரசு வலியுறுத்தியுள்ளது போன்று அல்லாமல் பயணிகளை கவரும் பொருட்டு மாறுதல்களை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அவரது வாகனம் அனுமதிக்கப்பட்ட பாதை வழியே செல்லவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொலிசாரின் நடவடிக்கைக்கு பயந்தே அவர் தீக்குளிக்க முயன்றதாகவும், மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE