பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

392

 

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச நிர்வாக மற்றும் சுதேச அமைச்சிற்கு முன்னால் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்த பொதுநிர்வாக முகாமைத்துவ உதவியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் யூ.பலிஹடவன உள்ளிட்ட சிலர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து வந்தனர்.

இவ்வாறு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் விநியோகம் செய்தால் கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸாரின் இந்த எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தல்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானது என தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு நாளை மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

 

SHARE