போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் கடுமையான விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளது.

282

 

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் கடுமையான விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் ஈராக்கில் புரிந்த அட்டூழியங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு போர்க்குற்ற விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆப்கானில் குந்துஸ்தான் மருத்துவமனை மீது அமெரிக்கா குண்டுவீசியது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படவில்லை.

அதே போன்று இஸ்ரேலியப் படைகளின் அட்டூழியங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள போதிலும், அந்த நாட்டு இராணுவத்திற்கெதிரான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால் லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பிரித்தானியாவில் தண்டனை அனுபவிக்கின்றார்.

அதேபோன்று விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதி ரமேஷின் மனைவியான தென்னாபிரிக்காவில் வாழும் வத்சலா சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுத்துள்ளார்.

ஈராக் போரின்போது அமெரிக்க இராணுவத்திற்கெதிரான போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோவுடன் அமெரிக்கத் தூதுவர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.

ஆனால் நன்றி மறந்த அமெரிக்கா தற்போது இலங்கை ராணுவத்திற்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

உலகின் மோசமான ஆறு கொரில்லா அமைப்புகள் தொடர்பாக பட்டியலிட்டு அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தவில்லை”

என்று குறித்த செய்தியில் தொடர்ந்தும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

SHARE