பௌத்த பிக்குகள் மற்றும் படையினரை தூண்டி விடும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச

252

 

கூட்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியை சீர்குலைக்கும் நோக்கில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் அணியொன்று, திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

mahinda-rajapaksa

நல்லாட்சியைக் குழப்பும் நோக்கில், பிக்குமார் மற்றும் பாதுகாப்பு படையினர் மத்தியில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளும் சதித்திட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக அரச புலனாய்வு பிரிவுகள், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளன.

இதனடிப்படையில், பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் அணியொன்று, இந்த சூழ்ச்சியை முன்னெடுக்க ஏற்கனவே திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் புலனாய்வு சபை எனக் கருதப்படும் புத்திஜீவிகளின் குரல் அமைப்பு இதில் பிரதான நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து வருகிறது.

மேலும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த சில இராணுவ அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளதாக புலனாய்வு பிரிவுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், போரில் அங்கவீனமடைந்த படையினரில் ஒரு அணியினரை பயன்படுத்தி, சில கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக முதலாது ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அரசாங்கம் நாட்டை பிளவுப்படுத்த போவதாக கூறி, பாதுகாப்பு படையினர், அவர்களின் குடும்பங்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பி, அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக திருப்பி, அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ள வைப்பது மற்றுமொரு திட்டமாகும்.

அத்துடன் குற்றச் செயல்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினரை விடுவிக்க கோரி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட மற்றும் இன, மத வாதங்களை தூண்டி சமூக அமைதிக்கு எதிராக செயற்பட்டு வரும் பிக்குகளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வருகிறது.

இது நியாயமான நடவடிக்கையாக இருந்தாலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பௌத்த பிக்கு சமூகத்தையும் சிங்கள பௌத்த நாட்டையும் அழிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்ற பொய்யான பிரசாரங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யானை திருட்டு சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உடுவே தம்மாலோக்க தேரர், மாதுளுவாவே சோபித தேரர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தொனியில் வெளியிட்ட கருத்தும் இவற்றில் ஒரு நடவடிக்கை என தற்போது தெரியவந்துள்ளதாக புலனாய்வு பிரிவுகள் கூறியுள்ளன.

SHARE