மகனின் கல்லறைக்குள் மறைந்திருக்கும் தாயின் கல்லறை: துட்டன்காமன் பிரமீடின் ரகசியத்தை தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் (வீடியோ இணைப்பு)

404
எகிப்தில் உள்ள துட்டன்காமன் கல்லறைக்குள் அவரது தாயாரான நெபர்டீட்டீயின் கல்லறைக்கு செல்லும் ரகசிய வழி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்து நாட்டில் உள்ள பிரமீடுகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாரோன் மன்னர்களில் இளையவரான துட்டன்காமன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு ஏறத்தால 100 ஆண்டுக்கு பிறகு அவரது கல்லறைக்குள் அவரது தாயார் நேபர்டீட்டீயின் கல்லறைக்கு செல்லும் ரகசிய வழி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரேவில் கூறியதாவது, நேபர்டீட்டீ எகிப்தின் அழகிய பெண் என்றும் இரண்டு நிலங்களின் பெண் என்றும் அழைக்கப்பட்டவர்.

எனினும் அவர் BC1340 ஆம் ஆண்டு இறந்தபின்பு அவரது கல்லறை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் மறைக்கப்பட்டது. ஆனால் அவரது மகனான துட்டன்காமனின் கல்லறை அருகே உள்ள சுவர்களில் இரண்டு பாதைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

ஒன்று பொருட்கள் செமிப்பு அறைக்கும் மற்றொண்று நேபர்டீடீ கல்லறைக்கு செல்ல கூடியதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE