மகளுக்காக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஹேடின்

317
புற்றுநோயால் அவதியுறும் மகளுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின்.அவுஸ்திரேலிய அணியின் பிரபல விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின்.

இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய 4 வயது மகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு உள்ளதால் அவருக்குத் துணையாக இருப்பதற்காக அப்படியொரு முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், எல்லோருக்கும் குடும்பம் தான் முக்கியம், நானும் அதுபோலத் தான்.

எந்தவொரு தந்தையை போலவே நானும் உள்ளேன், எனது மகளின் சிகிச்சை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.

என்னால் இன்னும் மூன்று டெஸ்டுகள் ஆடமுடியும் என்று மனைவி கூறினார். ஆனால் என் வாய்ப்பை இழக்கும் நிலையை நானே உருவாக்கினேன்.

அதற்காக நான் சிறிதும் வருத்தப்படப் போவதில்லை. ஏனெனில் வேறொரு இடத்துக்கு நான் தேவைப்படுகிறேன். அதுதான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

SHARE