மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நகரங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்

288
கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதனூடாக அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சமூகத்தின் அனைத்து தரப்பு நபர்களினதும் பொருளாதார மட்டத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.
நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில்  இடம்பெற்ற கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் குறைந்த வருமானத்துடன் வீடுகளில் வாழ்ந்த பொதுமக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “சியசெத்த செவன” மாடி வீட்டு கட்டிடத் தொகுதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, கொழும்பு நகரத்தில் பரந்து காணப்படுகின்ற போதைப் பயன்பாட்டை இல்லாது செய்யாமல் எவ்வளவு வீடுகள் நிர்மாணித்தாலும் பயனில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஒரு வீட்டை அமைப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை 5 மில்லியன் ரூபா வீதம் 133 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் 266 வீடுகளைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.
SHARE