மக்களை கொத்­த­டி­மைகளாக்கும் முஸ்லிம் கட்­சி­கள்

312

 

அர­சியல் யாப்பு மாற்றம் தொடர்பில் இன்று மக்கள் தளத்­திலே கருத்­தா­டல்கள் சூடு­பி­டித்­துள்ள நிலையில் முஸ்­லிம்­க­ளது நிலைப்­பாடு குறித்த கேள்­விகள் தொடர்­கின்­றன.

அந்­த­ வ­கையில் ஒட்­டு­மொத்த இலங்கை முஸ்­லிம்கள் குறித்த பின்­ன­ணியில் முழு­மை­யான ஒரு நகலும் தொகுக்­கப்­ப­டாத நிலையில் சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லுக்குள் முஸ்லிம் சமூகம் தள்­ளப்­பட்­டுள்­ளது கவ­லை­ய­ளிக்­கின்­றது.

உண்­மையில் முஸ்­லிம்­க­ளது பிர­தி­நி­திகள் என்ற கட்­சிகள் தமக்­கான நிலைப்­பா­டினை எப்­போதும் தெளி­வாகக் கொண்­டி­ருந்­த­தற்­கான சான்­று­களை வர­லாறு நெடு­கிலும் காண முடி­யாது. இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்ற தற்­போ­தைய முக்­கி­ய­மான தரு­ணத்தில் முஸ்லிம் கட்­சிகள் மௌனம் சாதிப்­பது பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் சமூக மட்­டத்தில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

டொலர்­களும், யூரோக்­களும் இலங்கை முஸ்­லிம்­க­ளது தலை­வி­தியை நிர்­ணயம் செய்து விட்­டதோ என்ற அச்­சப்­பாடும் முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மட்­டத்தில் ஏற்­ப­டத்­தொ­டங்­கி­யுள்­ளது.

ஆற்­றா­மையின் வெளிப்­பா­டாக இனியும் இந்த கட்­சி­களை நம்­பிப்­ பி­ர­யோ­சனம் இல்லை என்ற வைராக்­கி­யத்தில் சிவில் சமூக அமைப்­புக்கள் குறித்த விடயம் குறித்து பேச ஆரம்­பித்­துள்­ளன.

அர­சியல் யாப்பு திருத்தம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் ஒரு நிலைப்­பாட்­டிலும் தமது கட்­சிகள் மற்­றொரு நிலைப்­பாட்­டிலும் இருப்­பது எதிர்­கால தமது கட்சி அர­சி­ய­லுக்கு ஆப்­பாக அமைந்­து­விடும் என்ற கணிப்­பீட்டில் மெல்ல மெல்ல சமூ­கத்தை நாடி பிடிக்கும் முயற்­சியில் முஸ்லிம் கட்­சிகள் இறங்­கி­யுள்­ளன.

யானை வரும் பின்னே மணி­யோசை வரும் முன்னே என்ற பழ­மொ­ழிக்­க­மைய முஸ்லிம்­காங்­கி­ரசின் நிலைப்­பாடு கட்­சியின் கொள்கை பரப்புச் செய­லா­ள­ரினால் மக்கள் கருத்­துக்­காக கசி­ய­வி­டப்­பட்­டுள்­ளது. இணைந்த வட ­கி­ழக்­குக்குள் தனி­யான முஸ்லிம் அலகு என்ற கோஷத்தை முஸ்லிம் தளத்­திலே விட்டு நாடி பிடிக்க முயற்­சிக்­கின்­றனர்.

கிழக்கு கிழக்­கா­கவே இருக்­கட்டும்
கிழக்கு மாகாணம் தனி­யான மாக­ாண­மா­கவே இருக்க வேண்டும் என்­பது கிழக்கின் பெரும்­பான்மை முஸ்­லிம்­க­ளது நிலைப்­பா­டாகும். நேற்று முன்தினம் (2016.02.22) காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற மாகாண மட்ட முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளினால் கிழக்கு மாகாணம் தனி­யா­கவே அமைய வேண்டும் என்ற தீர்­மானம் எட்­டப்­பட்­ட­மையை இங்கு குறிப்­பிட முடியும்.

வர­லாற்று ரீதியில் கிழக்கு மாகாணம் என்றும் வடக்­கோடு இணைந்­தி­ருக்கவில்லை. மாறாக கிழக்கின் தமிழ், முஸ்லிம் சமூகம் வடக்கு தமி­லர்­க­ளுக்­கெ­தி­ரா­கவே செயற்­பட்­டி­ருந்­தனர் என்­ப­தனை முக்­குவர் திமிலர் போராட்ட வர­லாறு குறிப்­பி­டு­வதை வீ.சீ.கந்­தையா உட்­பட தமிழ் வர­லாற்­றா­சி­ரி­யர்­களின் நூல்­களில் இருந்து காண­மு­டியும். கிழக்கு மக்கள் ஒன்றில் கோட்டை இரா­ச­தா­னி­யு­டனோ அல்­லது கண்­டிய அர­சு­டனோ ஒன்­றித்­த­தாக அல்­லது வரி செலுத்தும் சிற்­ற­ர­சாக காணப்­பட்­டுள்­ளது என்­பது வர­லாறு.

எனவே கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகம் மாத்­தி­ர­மல்ல சிங்­கள சகோ­தர இனத்­த­வர்கள் கூட வட­ கி­ழக்கு இணைப்பை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. சுய­ந­லத்­திற்­காக இணைந்த வட­ கி­ழக்கு என்று சொன்­னாலும் கூட கிழக்கில் மூன்றாம் சிறு­பான்­மை­யாக காணப்­படும் 23 வீதத்துக்கும் கூடு­த­லான சிங்­கள மக்கள் ஒரே இரவில் சுமார் 10 வீதமாக மாற்றம் பெறு­வதும் சுமார் 40 வீதமாக வாழும் முஸ்­லிம்கள் இணைப்­பினால் 17 வீதமாக மாற்றம் பெறு­வதும் ஜன­நா­யக மொழியில் இன அடக்கு முறை­யாக கொள்­ளப்­படும்.

எனவே தற்­போ­துள்ள தனித்த மாகாண அலகில் தமி­ழரோ அல்­லது முஸ்­லிமோ அல்­லது சிங்­க­ள­வரோ முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் யதார்த்­த­மா­னது. ஒரு இனம் இன்­னொரு இனத்­திலே தங்கி சம­ரச அர­சியல் செய்­வ­தற்­கான சந்­தர்ப்பம் இங்கு நில­வு­கின்­றது.

நிலத் ­தொ­டர்­பற்ற முஸ்லிம் அலகு
வெளித்­தள அர­சியல் நிர­லுக்குள் சிக்­குண்ட சந்­தர்ப்­ப­வாத முஸ்லிம் கட்­சிகள் இணைந்த வட­ கி­ழக்­கினை முஸ்லிம் சமூ­கத்தில் திணிப்­ப­தற்­காக முஸ்லிம் அலகு என்ற பொய் ­மானைக் காட்டி சோரூட்ட நினைக்­கின்­றன. தமிழ் மக்கள் பேர­வையோ அல்­லது தமிழ்த் ­தே­சி­யக்­க ூட்­ட­மைப்போ சுய­நிர்­ண­யமும், தன்­னா­திக்­கமும், ஆள்­புல எல்­லை­யையும் கொண்ட தனி­யான முஸ்லிம் தேசி­யத்தை ஏற்­றுக்­கொள்­ளாமல் தமது அர­சியல் முன் மொழி­வு­களை வைத்­துள்ள நிலையில் தனி­யலகு என்ற ஆசு­வா­சப்­ப­டுத்­த­லுக்­கான பசப்பு வார்த்­தைகள் பாண்­டிச்­சேரி என்ற இந்­திய படத்­தினை முஸ்லிம் திரை­ய­ரங்­கு­களில் ஓட்ட நினைக்­கின்­றன.

நிலத்­தொ­டர்­பற்ற பாண்­டிச்­சேரி முறை­மையின் ஆழ அக­லங்கள் ஆரா­யப்­ப­டாமல் மட்பு­திரில் முஸ்லிம் சமூ­கத்தை தள்­ளி­விட முஸ்லிம் கட்சிகள் முனை­வது வர­லாற்றுத்­ துரோ­க­மாக அமைந்­து­விடும்.

பாண்­டிச்­சேரி என்­பது இந்­திய தேசத்தில் நிலத் ­தொ­டர்­பற்ற ஒன்­றியம்.

இதற்கு மாநில அந்­தஸ்த்து வழங்­கப்­ப­ட­வில்லை. மத்­திய அரசே இதனை கட்டுப்­ப­டுத்தும் அதி­கா­ரத்­தினை வைத்­துள்­ளது. மத்­தி­ய­ரசு 70 வீதம் நிதியை வழங்கும் என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் தற்­போது 28 வீதமான நிதியே கிடைக்­க­ப் பெ­று­கின்­றது.

மாநில நிரலில் இருந்­தி­ருந்தால் மாநில நிதி ஒதுக்­கீட்­டினை பெற்­றி­ருக்­கலாம். இதனால் பாண்­டிச்­சேரி நிர்­வாக அலகில் அரச ஊழி­யர்­க­ளுக்கே மாதாந்த ஊதி­யத்தை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமை பற்றி முஸ்லிம் கட்­சிகள் எதுவும் வாய் திறக்­க­வில்லை.

கல்வி சுகா­தாரம் மற்றும் இட ஒதுக்­கீடு தொடர்பில் பாண்­டிச்­சேரி முஸ்­லிம்கள் இழந்­துள்ள இழப்­புக்களை பட்­டியலிட­ மு­டியும். காவேரி நீரினை பக்­கத்து மாநிலம் மூடி­வி­டு­கின்ற போது சுமார் 32க்கும் அதி­க­மான விவ­சா­யக்­ கி­ரா­மங்கள் பட்­டி­னிச்­சாவை எதிர்­நோக்­கு­வது திட்­ட­மி­டப்­ப­டாத நிலத்­தொ­டர்பு அலகினால் ஆகும் என்­ப­தனை எவரும் வெளியில் சொல்­வதில்லை.

இணைந்த வட ­கி­ழக்கில் அனைத்து காடு, நீர் நிலைகள், நில வளங்­களும்  தமிழர் பெரும்­பான்­மைப் ­ப­கு­தியில் அமைந்­துள்ள நிலையில் எவ்­வாறு தங்­கி­ வாழும் அல­கினை முஸ்­லிம்கள் ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது? மாவி­லாற்­றினை திறக்க மறுத்த தமிழர் போராட்டம் எவ்­வா­றா­னது? என்­ப­தெல்லாம் ஆரா­யப்­பட வேண்­டிய முன்­னு­தா­ர­ணங்­க­ளாகும்.

பாண்­டிச்­சேரி ஒன்­றி­யத்தில் நிதி, கொள்கை வகுப்பு, சட்டமியற்றும் அதி­காரம் என்­பன மத்­திய அரசின் கட்­டுப்­பாட்டில் உள்­ளன. எனவே ஒன்றில் இணைந்த வட­ கி­ழக்கில் முஸ்லிம் அலகு தமிழ் தரப்­பிடம் பிச்­சைப்­பாத்­திரம் ஏந்­து­வதா அல்­லது மத்­திய அர­சிடம் மண்­டி­யி­டு­வதா என்ற தேர்­வினை தீர்­மா­னிக்க வேண்டி வரும்.

இவ்­வாறு சாத்­தி­யப்­பா­டற்ற நிலத்­தொ­டர்­பற்ற அலகினில் வாழ முடி­யா­தென்ற ரீதியில் வட ­மா­காண முஸ்­லிம்கள் கிழக்­கினை வடக்­குடன் இணை­க்கக் கூடா­தென்ற கருத்­தினை கொண்­டுள்­ளனர்.

இணைந்த வட­ கி­ழக்கில் ஒரு முஸ்லிம் அல­கென்றால் வட ­மா­காண முஸ்­லிம்­க­ளுக்­கான தனி­யான ஒரு நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் அலகு தேவை என்ற கோஷத்தை முன்­வைக்­கின்­றனர்.

இத்­த­கைய முரண்­பாட்­ட­ர­சி­ய­லுக்குள் தெளி­வின்றி சமூ­கத்தை கண்­ மூ­டித்­த­ன­மாக தள்­ளி­விட முனை­வதும் வட ­கி­ழக்­குக்கு வெளியில் வாழும் மூன்றில் இரண்டு பகுதி முஸ்­லிம்­க­ளுக்கு எவ்­வித தீர்­வினையும் குறிப்­பி­டாது நழுவிச்­செல்­வதும் அர­சியல் வங்­கு­ரோத்து தன்­மை­யினை வெளிக்­காட்­டு­வ­தாகவே அமை­கின்­றது.

அர­சியல் யாப்பு திருத்தம் குறித்த உத்­தேச தேர்தல் சட்ட  நகல் தினேஷ் குண­வர்த்­த­வினால் 2007 ஜூன் மாதம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்த இடைக்­கால அறிக்­கையின் போது முத்து சிவ­லிங்­கத்­துடன் சேர்த்து முஸ்லிம் காங்­கி­ரஸும் தமது முன்­மொ­ழி­வு­களை எழுத்து மூலம் வழங்­கி­யது.

அத்­தோடு 2015 மார்ச் 10 ஆம் திகதி அனைத்து கட்­சிகள் கூட்­டத்தில் முன் மொழி­வு­களை சமர்ப்­பித்த பின்­னரும், தமிழர் தேசிய கூட்­ட­ணியுடன் புரிந்­து­ணர்வு பேச்­சுக்கள் திருப்­தி­க­ர­மாக அமைந்­தது என ஊடக அறிக்­கைகள் விட்­டதும் போக எல்லாம் என்­னென்ன விட­யங்கள் என்பதனை மக்கள் மன்றிற்கு சமர்ப்பிக்க இத்தகைய முஸ்லிம் கட்சி முன்வரவில்லை என்பது கவலைக்குரியதும் சந்தேகத்தினை தோற்றுவிப்பதுமாக அமைந்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே ஒரு முன் மொழிவை தயாரித்து தமிழ் சமூகத்திற்கு வெளிப்படையாக சென்றடையச் செய்த போதும் முஸ்லிம் சமூகத்தின் பெயரால் அரசியல் இலாபங்களை அனுபவிக்கும் இம்முஸ்லிம் கட்சிகள் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது.

அரசியல் தலைமைகளுக்கு பின்னால் சமூகம் சென்ற காலம் மலையேறிவிட்டதாக கருத வேண்டியுள்ளது.

சமூகத்தின் பின்னால் அரசியல் தலைமைகள் தொங்கிக் கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் விழிப்புணர்வு சிறிதளவு காணப்படுகின்றது என்பதனை கடந்தகால ஜனாதிபதி தேர்தலில் இருந்து அரசியல் தலைமைகள் பாடம் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

SHARE