மட்டக்களப்பில் மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட விமான ஓடு பாதை

312

 

Batti airportமட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையில் எம்.ஏ.60 விமானத்தின் மூலம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமான நிலையத்துக்கான நினைவுக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்து விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

1958 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்தை 1983 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி விமானப் படை பொறுப்பெடுத்து கொண்டது.

பொது விமானப் போக்கு வரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறவுள்ளன.

இந்தத் திறப்பு விழாவில், மாகாண ஆளுநர், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.Batti airport 1Batti airport 2Batti airport 3Batti airport 4Batti airport 5Batti airport 6Batti airport 7Batti airport 8Batti airport 9Batti airport 10Batti airport 12Batti airport 13Batti airport

SHARE