மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014 வாக்­காளர் இடாப்­பு­க்களின் அடிப்­ப­டையில் 3 இலட்சத்து 65 ஆயிரத்து 163 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்

425

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 2014 வாக்­காளர் இடாப்­பு­க்களின் அடிப்­ப­டையில் 3 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 163 பேர் வாக்­க­ளிப்­ப­தற்குத் தகுதி பெற்­றுள்­ளனர். நாட­ளா­விய ரீதியில் இவ்­வாண்­டுக்­கான சகல வாக்­காளர் இடாப்­பு­க்களும் கடந்த 31 ஆம் திகதி அத்­தாட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதற்கு அமைய மட்­டக்­க­ளப்பு தேர்தல் தொகு­தியில் ஓர் இலட்­சத்து 72 ஆயி­ரத்து 497 பேரும் கல்­குடா தொகு­தியில் ஒரு இலட்­சத்து 5 ஆயி­ரத்து 55 பேரும், பட்­டி­ருப்புத் தேர்தல் தொகு­தியில் 87 ஆயி­ரத்து 611 பேரும் அடுத்து வர­வுள்ள தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்குத் தகுதி பெற்­றுள்­ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டில் வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை 6,958 ஆல் அதி­க­ரித்­துள்­ளது. 2013 இல் மட்­டக்­க­ளப்பு தேர்தல் தொகு­தியில் 1,69,494 பேரும், கல்­குடா தேர்தல் தொகு­தியில் 1,02,970 பேரும், பட்­டி­ருப்பு தேர்தல் தொகு­தியில் 85,741 பேருமாக 358,205 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

 

SHARE