துருனு சிரம சக்தி செயற்திட்டத்தினை பொதுமக்களுக்கு கையளித்தல் நிகழ்வு இன்று கூழாவடி திஸ்ஸ வீரசிங்க சதுக்கத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இ .ஜே . பயஸ் ராஜ் தலைமையில் இடம்பெற்றது .
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டுதலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஸ்ரீ லங்கா இளைஞர் பாராளுமன்ற செயற்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனம் கூழாவடி திஸ்ஸ வீரசிங்க சதுக்க கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஒத்துழைப்புடன் கட்டியெழுப்பப்பட்ட அறநெறி பாடசாலை கட்டிடம் செயற்திட்டம் பொது மக்களின் அபிலாசையினை நிறைவேற்றும் உன்னத நோக்கத்துடன் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று இக்கட்டிடம் கூழாவடி திஸ்ஸ வீரசிங்க கிராம சேவை பிரிவில் இயங்கும் அறநெறி பாடசாலைக்காக பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் , மண்முனை வடக்கு இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திருமதி .பிரியதர்ஷன் மற்றும் இளைஞர் கழக இளைஞர்கள் கலந்துகொண்டனர் .