மதுவிற்கு அடிமையான கோடீஸ்வர தாய்: குழந்தைகளை பராமரிக்க தவறியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

274
பிரித்தானியா நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தாயார் ஒருவர் மது போதைக்கு அடிமையாகி குழந்தைகளை பராமரிக்க தவறியதால், அந்த குற்ற உணர்வு தாங்காமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு லண்டனில் உள்ள 12.5 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள 5 அடுக்கு சொகுசு மாளிகையில் சாரா ஜான்சன்(36) தன்னுடைய கணவன் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.கோடீஸ்வரரான சாராவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் காலை, மதியம் மற்றும் இரவு என நினைக்கும் நேரத்தில் எல்லாம் மது அருந்தி வந்துள்ளார்.விஷேட நாட்கள் எனில் சுயநினைவு போகும் வரை மது அருந்திவிட்டு மயங்கிவிடுவார். இதனால், அவருடைய 3 குழந்தைகளையும் பராமரிக்க முடியவில்லை என்ற குறை அவர் மனதில் நீடித்தவாறு இருந்துள்ளது.குடிப்பழக்கத்தை மறக்க சிகிச்சை மேற்கொண்டார். எனினும் அதிலிருந்து மீள மிடியவில்லை. இதனை தொடர்ந்து, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த ஏப்ரல் 26ம் திகதி உடல்நலத்தில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து, மனநல மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கணவனுடன் திரும்பியுள்ளார்.

ஆனால், அப்போதும் அவரால் மது மீதான உணர்வுகளை கட்டுப்படுத்த இயலவில்லை என கூறப்படுகிறது.

பின்னர், தனது கைப்பேசியில் தற்கொலை செய்துக்கொள்வது எப்படி என தேடி பார்த்துவிட்டு தனது கணவனுக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ஏப்ரல் 27ம் திகதி அதிகாலை வேளையில் விக்டோரியா ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு வந்த ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.

லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று வந்தபோது பேசிய நீதிபதி, இந்த தற்கொலை சம்பவத்தில் கணவன் மனைவி விவகாரம் எதுவும் இல்லை.

சாராவின் குடிப்பழக்கம் மற்றும் அவருடைய குழந்தைகளை ஒரு தாயாராக பராமரிக்க முடியவில்லை என்ற ஏக்கமும் கவலையும் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது என்பது நிரூபனம் ஆகியுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

SHARE