மனைவியுடன் கடலில் உற்சாகமாக ஆட்டம் போட்ட பிரித்தானிய பிரதமர்.

304
பிரித்தானியாவின் பிரதமரான டேவிட் கமரூன் விடுமுறையை முன்னிட்டு தனது மனைவியுடன் கடற்கரையில் உற்சாகமாக நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார்.
பிரித்தானியாவின் பிரதமரான டேவிட் கமரூன் அகதிகள் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்.இந்நிலையில் கார்ம்வெலின் போல்ஜீத் பகுதியின் கடற்கரைக்கு தனது மனைவி சமந்தாவுடன் வந்த கமரூன் உற்சாகமாக நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார்.2 நாள் விடுமுறையாக வந்த அவர் நீர்சறுக்கு விளையாட்டுக்கு தேவையான உடைகளை அணிந்திருந்தார்.

மேலும் அவருக்கு காதில் சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அதற்கு தக்க பாதுகாப்பு கருவியை பொருத்தியிருந்தார்

தனது மனைவியுடன் சேர்ந்து அவரும் கடல் அலையில் உற்சாகமாக விளையாட்டினர் என்று கூறப்படுகிறது

இருவரும் பாதுகாப்பு கருவிகளின் உதவியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE