மனைவி, பேரக்குழந்தைகளுடன் ஐ.எஸ் அமைப்பில் இணைந்த 80 வயது தாத்தா

326
சீனாவை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார்.சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த முகமது அமின்(80) என்பவர், தனது மனைவி, மகள் மற்றும் 4 பேரன்களுடன் சீனாவில் இருந்து கிளம்பி சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து ஐ.எஸ் அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அமின் கூறியிருப்பதாவது, நான் ஹிஜ்ரா(மத வழியில் பயணம்) செய்து சிரியா வந்துள்ளேன்.

என்னுடன் என் 4 பேரன்கள், மகள் மற்றும் மனைவியை அழைத்து வந்துள்ளேன். சிரியாவில் இருந்த என் போராளி மகன் கொல்லப்பட்ட வீடியோவை பார்த்த பிறகே இங்கு வந்துள்ளேன்.

தற்போது பயிற்சி முகாமில் கலந்து கொண்டு இளைஞர்கள் செய்பவற்றையெல்லாம் செய்கிறேன் என்று கூறியுள்ளார். சீனாவில் கடந்த 60 ஆண்டுகளாக கொடுமைக்கு ஆளானதால் சிரியா வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கருப்பு நிற உடை அணிந்திருக்கும் அமின் ஒரு கையில் ஐஎஸ் கொடியும், மறுகையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் வைத்துள்ளார்.

SHARE