மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம்!-இடி அமினாகக் காட்சியளித்தார் ஜனா

329

 

” மன்னிப்போம்  – மறக்க மாட்டோம் ” – இது ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர் . ஜெயவர்த்தனாவின் பிரபலமான கூற்று. 1987 ல் தம்முடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள இந்திய ஆட்சியாளர்கள்  கொடுத்த அழுத்தங்கள் தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார், அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்காவின் இறைமையை மீறி இந்திய வான் படை விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொதிகளை வீசியமை, கடல் வழியே உணவுப் பொருட்களை கொண்டுவர இந்தியக் கடற்படை முயற்சித்தமை போன்ற சம்பவங்களை மனதில் வைத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால் இன்றல்ல என்றைக்கும் மன்னிக்கவும் மாட்டோம் – மறக்கவும் மாட்டோம் என மட்டக்களப்பு மக்கள் குறிப்பாக ஆரையம்பதி வாசிகள் கூறும் சம்பவங்கள் அங்கு நிறைய நடந்துள்ளன, 1988 – 1992 காலப்பகுதிகளில் அவர்களுக்கு இடி அமினாகக் காட்சியளித்தார் ஜனா என்கிற கோவிந்தன் கருணாகரம். மட்டக்களப்புப் பிராந்தியத்தின் டெலோ இயக்கப் பொறுப்பாளராக இருந்த இவர் 1989 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மண் கவ்வியவர், இவர் வாக்குச் சேகரிக்க ஆரையம்பதிக்குச் சென்ற போது மாவீரர் 2ம் லெப் கலாவின் ( பொன்னம்பலம் சதானந்தரத்னம்) மருமகனும் அவரது உறவினர்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.19/04/1988 அன்று செட்டிபாளையத்தில் கலாவை சம்மட்டியால் தாக்கியத்துடன் வெட்டியும் கொலை செய்தவர் ஜனா. அன்றைய காலத்தில் ஜனாவின் கட்டளைகளை  நிறைவேற்றுபவர்களாக கணேஷ் , ஜீவா , டெலோ மாமா , சாந்தன் ,,மூக்கன்  ரவி ,கிழவி ரவி,ராபட் ,ராம் ,அன்வர் ,சரத், வொட்டொ (செங்கலடி),அலெக்ஸ் அருமை (க ஜெயாமுதலானோர் இருந்தனர். இவர்களில் ஜனா, ராம், கணேஷ்,ஜீவா,டெலோ மாமா மட்டுமே உயிருடன் இருக்கின்றனர். சாந்தன் ,,மூக்கன்  ரவி ,கிழவி ரவி,ராபட் ,ராம் ,அன்வர் ,சரத், வொட்டொ (செங்கலடி),அலெக்ஸ்  ஜெயாஆகியோருக்கு புலிகளால் சாவொறுப்பு தண்டனை வழங்கப்பட்டது , அருமை இயற்கை மரணம் அடைந்தார் ,

 

இவ்வளவு ஆஜாரங்களையும் புரிந்து விட்டு எந்த முகத்துடன் வாக்குக் கேட்க வருகிறாய் என ஜனாவை நேரடியாகவே கேட்டனர் மக்கள்  அங்கு ஏற்படட குழப்ப நிலையைச் சமாளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் செல்வராஜா விரைந்தார் விளைவு அந்தத் தேர்தலில் விருப்பு வாக்கில் கடைசி ஆளாக இடம் பெற்றுத் தோல்வியடைந்தார்  செல்வராஜா. ஜானாவுக்காக பரிந்து பேசப் போய் ஒரு கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு விருப்பு வாக்கில் கடைசி இடம்பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெயர் தான் செல்வராஜாவுக்கு கிடைத்தது.
ஜானாவுக்குப் பிரச்சனையாக இருந்த இடத்துக்குப் பக்கத்தில் தான் வணிகரான இளையதம்பி தம்பிராஜா வாழ்ந்து வந்தார். இன்று 20/08/2019 அவரது 25 வது ஆண்டு நினைவு நாளாகும்.1991ல்  இதே நாளில் தான் அவர் ஜனாவின் ஆணைப்படி கோடரியால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டார்.
ஏற்கெனவே 1990 ஒக்டோபர் ஐந்தாம் நாள் வங்கி ஊழியரான இவரது மகன் குருகுலசிங்கம் இதே டெலோ குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். மகனை இழந்த துயரில் ஆழ்ந்திருந்த தம்பிராஜாவையும் பிரிந்த துயரில் ஆழ்ந்தது அவரது குடும்பம். பட்ட காலில் படும் என்பது போல தம்பிராஜாவின் மகளான திருமதி மலர் நாகேந்திரத்தைச் சுட்டுக் கொன்றது டெலோ அப்போது அவர் கர்ப்பிணி வயித்துக்கு என்ன புலிக்குட்டியா இருக்கு என்று கேட்டு விட்டே சுட்டனர் ராம் , அன்வர் , சரத்,ராபட் ஒரு கர்ப்பிணிப் பெண்ணைச் சுட்டுக் கொன்ற சாதனை நாளாக 1992 பெப்ரவரி 8 ம்  திகதியைப் பதிந்து கொண்டார் ஜனா ,
கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவது உலக இயல்பு. தம்பிராஜா – குருகுலசிங்கம் – மலர் அப்படி என்ன தான் குற்றம் செய்தார்கள் ? மலரின் கணவரும் போராளி இல்லை, அப்படியிருக்க வயித்துக்கு என்ன புலிக்குட்டியா ? என ஏன் கேட்டனர்? எல்லாம் ஜானாவுக்குத்தான் வெளிச்சம் தேசிய விடுதலைக்கு தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கினார்கள் என்ற ஒரு காரணத்தைக் தவிர வேறு எதனையும் ஜனாவால் கூறமுடியாது .
இன்றோ சுதுமலையில் இடம்பெற்ற முற்றுகையில் கிட்டுவைக் காப்பாற்றியது நானே . புலிகளுக்கு எந்த இழப்புமில்லாமல் அந்த முற்றுகையை முறியடித்தேன் எனக் கரடி விடுகிறார். அந்தச் சமரில் தான் விடுதலைப் புலிகளின் முதலாவது மேஜர் அல்பட் (கந்தையா ரூபதநிதி) வீரச்சாவெய்தினார் என்பதைக் கூட அறிந்திராத இவர் வரலாற்றுக்குள் கற்பனைகளைக் கலக்கிறார். இவரது கற்பனைகளைத் தலைப்புச் செய்தியாக்குபவர்கள் அன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளராகவோ – பத்திரிகை உதவி ஆசிரியர்களாகவோ இருந்தோம் எனப் பறை தட்டுவதில் பயனில்லை.
அதுமட்டுமல்ல விஜி என்கிற உயர்தர வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கிவிட்டுக் கொன்று ஆற்றில் வீசியவர்கள் இவரது தலைமையிலான குழுவினரே. நாட்டுப்பற்றாளரும் பிரதிஸ் என்ற மாவீரரின் தாயாருமான திருமதி பூரணலட்சுமி சின்னத்துரை போன்றோரை சுட்டுக் கொன்றதும் இவர்களே. இச்சம்பவங்களில் ஈடுபட்டொர் புலிகளினால் சாவொறுப்புக்குள்ளானார்கள் தப்பித் பிழைத்த ராமும் ஜனாவும் கொழும்பை வதிவிடமாக்கிக்கொண்டனர். பந்தியில் பாயசம் வரும்வரை காத்திருப்பதைப்போல் பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடியும் வரை அனைத்தையும் அனுபவித்து விட்டு இங்கிலாந்துக்குத் தப்பி யோடினார் ஜனா.  யுத்தம் முடிவுக்கு வரும் வரை நாட்டுக்குத் திரும்புவது பற்றி அவர் கனவிலும் நினைக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இவருக்கும் எதுவிதமான சம்பந்தமுமில்லை. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு காரணம் என்று யார் யாரையோ வெல்லாம் சுட்டிக் காட்டுகிறார். அதாவது ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து கொள்கின்றனர்.
மக்கள் மீது அராஜகம் புரிந்தவர்களாக ஒரு காலத்தில் இனங்காணப்படட டெலோவிலிருந்து கவீந்திரனும் புளொட்டிலிருந்து வியாழேந்திரனும் கிழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களது தனிப்படட வாழ்வு எந்த வன்முறைகளுடனும் தொடர்பில்லாதவை. ஆனால் டெலோவின் ஜனாவும் ஈ .பி .ஆர் .எல் .எப் வின் இரா . துரைரத்தினமும்  அவ்வாறானவர்களல்ல. இவர்கள் நேரடியாகவே சம்பந்தப்படடவர்கள் . அரசியல் அரங்கில் நேரடியாக சம்பந்தப்படும்போது இவர்கள் புரிந்த வன்முறைகள் நினைவுக்குவரும். எனவேதான் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது  மன்னிக்கவும் மாட்டொம் , மறக்கவும் மாட்டோம்
மட்டு நேசன்

 

SHARE