மயிரிழையில் உயிர் தப்பிய விமானிகள்

332
மலேசியாவில் நடைபெற்ற விமான பயிற்சியில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மலேசியாவில் Langkawi International Maritime and Aerospace என்ற கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் இடம்பெறுவதற்காக மலேசியா மற்றும் இந்தோனிஷியாவை சேர்ந்த விமானங்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

விமானங்கள் லாவகமாக பறந்து பல சாகசங்களை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது இந்தோனேஷியாவின் Jupiter Aerobatic அணியை சேர்ந்த இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகின.

நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு விமானங்களும் தீப்பற்றி எரிந்துக்கொண்டே தரையை நோக்கி வேகமாக சென்றுள்ளன.

ஆபத்தை உணர்ந்த இரண்டு விமானிகளும் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் பாராசூட்டுகளை இயக்கி விமானத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து நொருங்குவதற்கு சில விநாடிகளே இருந்த நிலையில், விமானங்களை இயக்கிய 4 விமானிகளும் வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.

விமானங்கள் கீழே விழுந்ததில் எந்த உயிர் சேதமும் ஏற்படாதபோதும், அதிலிருந்து வெளியான தீப்பொறிகளால் கார் மற்றும் ஒரு வீடு எரிந்து பாதிப்புக்குள்ளானது.

பாதுகாப்பாக தரை இறங்கிய 4 விமானிகளும் அங்குள்ள Langkawi மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவமனையில் விமானிகளை சந்தித்த மலேசிய நாட்டு பாதுகாப்பு மந்திரியான Hishammuddin Hussein, விமானிகள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

malysia_flightaccident_003

SHARE