மருத்துவமனையை இடித்து தள்ளிய அரசு – நோயாளிகள், ஊழியர்கள் சிக்கித் தவிப்பு

277
சீனாவில் செங்சோ மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றை அரசு இடித்து தள்ளியதால் அதில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் சிக்கித் தவித்துள்ளனர்.சீனாவின் செங்சோ மாகாணத்தில் சாலையை விரிவாக்கும் பொருட்டு அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையை அந்த மாவட்ட அரசு இடித்துள்ளது.

இதில் பிணவறையில் பாதுகாத்திருந்த 6 உடல்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளது, மேலும் மருத்துவமனை ஊழியர்கள் பலபேர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 10 மில்லியன் யுவான் அளவிற்கு மருத்துவ கருவிகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாலையை விரிவுபடுத்தும் பொருட்டு அந்த மருத்துவமனையை இடிக்க அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் அரசின் அந்த கோரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் நிராகரித்திருந்த நிலையில், முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென வந்து இடித்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்த அரசு அதிகாரிகள், மருத்துவமனை இடிப்பது குறித்து ஏற்கனவே தகவல் உரிய முறையில் அளிக்கப்பட்டதாகவும்,

இடிக்கப்படும் பகுதியில் நோயாளிகள் எவரும் இல்லை என உறுதி செய்த பின்னரே அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

வலுக்கட்டாயமாக கட்டிடங்கள் இடிக்கப்படுவது சீனாவில் இது முதல் முறையல்ல என தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள்,

கடந்த 2012-ஆம் ஆண்டு இதேப் போன்று சாலையை விரிவாக்கும் பொருட்டு கட்டிடம் ஒன்றை இடிப்பதில் முனைப்பு காட்டிய அதிகாரிகளை ஒரு ஜோடி தடுத்து நிறுத்தி போராடியது.

இதனையடுத்து அந்த வீட்டின் ஒருபகுதியை மட்டுமே இடித்துவிட்டு எஞ்சிய பகுதியில் சாலை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE