மலேசியாவில் அநாதையான ஜெட் விமானங்கள் புலிகளுடையதா…?

318

 

 

மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளனMalasejaர்.

த ஸ்டார் அண்ட் சின் சூ என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், “ TF-ARM, TF-ARN, TF-ARH என்ற பதிவு எண் கொண்ட 3 போயிங் 747 -200F ரக விமானங்கள் எங்கள் விமான நிலையத்தில் உள்ளது.

இன்னும் 14 நாட்களுக்குள் இதன் உரிமையாளர் வந்து விமானத்தை கொண்டு செல்லவில்லையென்றால், இந்த விமானங்களை விற்பதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த விளம்பரத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். உரிமையாளர் வரும் பட்சத்தில், விமானத்திர்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

விமானத்தை தொடர்ந்து இயக்குவதற்கான பணம் இல்லாததே இப்படி விட்டுச் சென்றதற்கு காரணமாக இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் கருதுகின்றனர். அதே நேரம், 21-ம் தேதிக்குள் விமானத்தின் உரிமையாளர் வர வில்லையென்றால் விமானங்களை ஏலம் விட்டு விடுவோம் அல்லது எடைக்கு போட்டு விடுவோம் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பின்னடைவின் பின் பல விலை உயர்ந்த சொத்துக்கள் அவை இருந்த இடங்களில் முடங்கியமை உலகறிந்த உண்மை அதில் அதீதமான சொத்துக்களை பல தனி மனிதர்கள் கையகப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மலேசிய நாடு உலகின் பல கடத்தல்களின் மையமாக உள்ளதுடன் விடுதலைப் புலிகளின் பல முக்கிய பொருட்களை மலேசியாவை மையப்படுத்தியே மறை முகமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் நகர்தி வந்தமை புலனாய்வுச் செய்தி….

விடுதலைப் புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதன் முக்கியஸ்தர்கள் பலர் வெளிநாடுகள் பலவற்றில் கைது செய்யப்பட்டதுடன் மலேசியாவில் வைத்து புலிகளின் முக்கிய சர்வதேச பெறுப்பாளர் கே.பி மற்றும் பல முக்கியஸ்தர்கள் அதனைத் தொடர்ந்து பலர் குறித்த நாட்டில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

கடல் வழிக் கடத்தல் ஆகாய வழிக் கடத்தல் என்பவற்றில் பாரிய கப்பல்கள் மற்றும் விமானங்களை மலேசியாவில் வெளிநாட்டவர்களின் பெயர்களில் கொள்வனவு செய்யப்பட்டு விடப்படுவது வழமை அதற்கு மலேசிய அரசும் எந்தத் தடையும் விதிப்பது இல்லை வருடாந்த வரிகளை ஒழுங்கு முறைப்படி செலுத்தினால் இப்படியான விடயங்களை ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை.

ஆனால் இந்த விமானம் விடுதலைப் புலிகளுடையது என்பதுடன் வருடாந்த வரிப்பணம் கட்டுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலை என்பதுடன் வரிப் பணம் கட்டாமையே இவ்வாறான நிலைமைக்கு காரணம் என எமது ஜே.வி.பியின் புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள புலனாய்வுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கையின் தேசிய அரசு பதவிக்கு வந்த பின்னர் புலிகளின் முக்கிய பிரமுவர்கள் பலரை உள்வாங்கியுள்ளதுடன் அதன் தாக்கங்கள் எதிர் காலத்தில் பாரிய அளவில் வெளிப்படும் எனவும் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

SHARE