மஹிந்தவின் பொருளாதாரக் கொள்கையை விமர்சிக்கும் ஜனாதிபதி மைத்திரி

278

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொருளாதார கொள்கையையும் மனித உரிமை விடயங்களையும் அவர் கையாண்ட விதத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது வருட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி, இந்தக் காரணங்களால் தான் மஹிந்த ராஜபக்ச தோல்வியை தழுவியதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியிடம் தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டாம் என்று தாம் கூறியபோதும் அதனை மதிக்காது அவர் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.

இதன் அடிப்படையில் அவர், விளைவுகளை சந்தித்ததாக மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம், மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டு அதன்மூலம் பொருளாதாரத்தை மீண்டும் இயல்புக்கு கொண்டு வரமுயல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், நல்லிணக்கம் மற்றும் தேசியப்பிரச்சினைகள் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE