மஹிந்தவுடனான உறவில் விரிசல்! நல்லாட்சி அமைச்சரை நாடும் வீரவன்ச மற்றும் கம்பன்பில

252

 

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரும், சமகால நல்லாட்சி அரசாங்க அமைச்சர் ஒருவரிடம் நெருக்கமான உறவை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் தேர்தலில் புதிய கட்சி ஒன்றில் போட்டியிட ஆயத்தமாகி வரும் நிலையில், குறித்த இருவரும் நல்லாட்சி அரசாங்க அமைச்சரை நாடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீரவன்ச மற்றும் கம்மன்பிலவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே குறித்த அமைச்சருடன் இருவரும் கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைச்சர் தற்போது வரையில் ராஜபக்சர்களின் மோசடி கொடுக்கல் வாங்கல்களை மூடி மறைக்கும் ஒப்பந்தத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறான ஒப்பந்தத்தை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில பொறுப்பேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீரவன்ச மற்றும் கம்மன்பிலவின் கோரிக்கைக்கு குறித்த அமைச்சரிடமிருந்து சிறந்ததொரு பதில் கிடைத்திருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஊழல் மோசடிகளை மூடிமறைக்க உதவுமாறு, ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர் தயா கமகேயுடன் உடன்பாடுகளை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பான இரகசிய சந்திப்பு மலேசியாவில் நடைபெற்றதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE