மஹிந்தவுடன் கூட இருந்து குழிபறித்த மைத்திரிபால சிறிசேன – ஜனாதிபதியின் தோல்விக்கு முதற்படி

408

 

சற்றுமுன் கிடைத்த தகவலின்படி மைத்திரிபால சிறிசேன  சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும், அது மட்டுமல்லாது அவர் பொதுவேட்பாளராக போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் விலகியமை தொடர்பிலும், பொதுவேட்பாளராக நிற்பது பற்றியும் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷவுடன் நீண்ட நாட்கள் அரசியலில் பக்க பலமாக இருந்துவிட்டு இறுதியில் சந்திரிக்காவுடன் இணைந்து மஹிந்தவிற்கு குழிபறித்துவிட்டார் என்பதும் சிறப்பம்சமாகும்.

Maithripala 10951-2

விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்களில மைத்திரிபால சிறிசேன ஆர்வம் காட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும். மட்டுமல்லாது தமிழ் மக்களுடைய பிரச்சினையை இவர் திறம்பட கையாள்வார் என்று கூறமுடியாது விட்டாலும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்க்கப்படுவது உறுதியான விடயமொன்றாகும்.

பொது வேட்பாளராக மைத்திரிபால அதிரடி நியமனமாம்….

எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த முன்னான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திரைமறைவில் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது எனத் தெரியவருகிறது.

பொதுவேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் மஹிந்த அரசுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படவுள்ளார் எனத் நம்பகமாக அறியமுடிகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசின் அமைச்சருமான மைத்திரிபால இன்று வெள்ளிக்கிழமை தமது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு எதிரணியின் பக்கம் சேருவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருடன் ஆளுந்தரப்பில் இருந்து உறுப்பினர்கள் பலரும் எதிரணியின் பக்கம் வருவார்கள் எனவும் மேலும் அறியவந்தது.

எதிரணியின் தலைவர்கள் அனைவரும் மைத்திரிபாலவை பொதுவேட்பாளராகக் களமிறக்குவதற்கு நேற்று சம்மதம்’ தெரிவித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. சந்திரிகாவின் அயராத முயற்சினால் மைத்திரிபால ஆளுந்தரப்பில் இருந்து எதிரணி பக்கம் சேரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

THINAPPUYAL NEWS

SHARE