மஹிந்த அரசாங்கத்திற்கு நெருக்கமான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு

351
ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 22ம் திகதி சில முக்கிய இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க எதிர்வரும் 22ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார்.

கூட்டுப்படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரியவும் எதிர்வரும் 22ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார்.

ஜகத் ஜயசூரியவிற்கு பதிலாக விமானப்படைத் தளபதி கோலித குணதிலக்க நியமிக்கப்பட உள்ளார்.

வன்னிப் போருடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் உள்ளிட்ட மேலும் ஐந்து சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளும் எதிர்வரும் 22ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களே இவ்வாறு ஓய்வு பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கம் இவர்களின் சேவைக் காலத்தை நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE