மஹிந்த கட்சியை விட்டுச் போனாலும் நான் போகப் போவதில்லை – நிமல் சிறிபால டி சில்வா-அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா

465

 மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றாலும் நான் கட்சியை விட்டுப் போகப் போவதில்லை என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

images
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறுகிறது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்களாக பதவி வகித்த பலர் கடந்த காலங்களிலும் கட்சியை விட்டுச் சென்றிருந்ததாக கூறினார்.
மக்களின் செல்வாக்கு மிக்க கட்சி என்ற வகையில் பொதுச் செயலாளரின் வெளியேற்றத்தால் மக்கள் செல்வாக்கிற்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஓரிருவரால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு பலர் பிரிந்து சென்றிருந்ததாக தெரிவித்த அமைச்சர், அவர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் கூறினார்.
ரணில் விக்ரமசிங்கவை நிரவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக பதவியில் அமர்த்த வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இல்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சவால்கள் நிறைந்த சூழலில் மேலும் மேலும் பலமடைந்த கட்சி என்ற வகையில் தற்போதைய நிலைமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

 

SHARE