மஹிந்த ராஜபக்ஷ மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள கூட்டு அரசாங்கம் முயற்சி

261

 

மஹிந்த ராஜபக்ஷ மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள கூட்டு அரசாங்கம் முயற்சி

mahinda_pavithra_ci
யுத்தம் முடிவடைந்து 07வருடங்களை அண்மித்த நிலையில் நாட்டின் பாதுகாப்பானது பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இதுவரையிலும் நீக்க விரும்பாத இலங்கை அரசு அதனைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கான காரணம் இந்த நாட்டில் விடுதலைப்புலிகளுடைய தலையீடு இருக்கிறதென்பதேயாகும். மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் பொது இடங்களில் ஊர்வலங்களில் கலந்துகொள்வதென்பது தவிர்க்கப்படவேண்டிய விடயமொன்றாகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த நாட்டிலிருந்து நீக்கப்படும் வரை முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான தாக்குதல்கள் கூட்டு அரசாங்கத்திலுள்ள ஒரு சிலரினால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படலாம் எனஅமெரிக்காவின் உளவுப் பிரிவான சிஐஏயின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினர் கருத்து வெளியிட்டுள்ளனர். இவர்களே இத்தகைய செயலை செய்யத் தூண்டுகின்றார்களா? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ மீது தற்கொலைத் தாக்குதல்களோ, துப்பாக்கிப் பிரயோகங்களோ நடத்தப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே அதற்கான பொறுப்பினைக் கூறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவே இனிவரும் காலங்களில் பாத யாத்திரைகளைத் தவிர்த்துக்கொள்வது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குச் சிறந்ததொன்றாகும்.

 

SHARE