’மாடுகளுக்கு மரணம் வருவது தெரியுமா? இறைச்சி கூடத்திலிருந்து கடைசி நிமிடத்தில் தப்பித்து ஓடிய மாடு

317
பிரான்ஸ் நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் கூடத்திலிருந்து மாடு ஒன்று கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து தப்பித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.பிற ஐரோப்பிய நாடுகளை போல், பிரான்ஸ் நாட்டிலும் மாட்டு இறைச்சியை விரும்பி உண்பவர்கள் அதிகம். இதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வருகின்றன.இதுவரை இல்லாத வகையில், இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடு ஒன்று கடைசி நிமிடத்தில் கூடத்திலிருந்து தப்பித்து உயிர் பிழைத்த சம்பவம் பிரமிக்க வைத்துள்ளது.

தெற்கு பிரான்ஸில் உள்ள Ambert நகரில் மாடுகளை வெட்டும் கூடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மாடுகளை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு விட்டு, தேவைப்படும் நேரத்தில் மாடுகளை ஒவ்வொன்றாக கொண்டு வந்து வெட்டி இறைச்சி தயார் செய்வார்கள்.

இந்நிலையில், கடந்த யூன் 30ம் திகதி, இந்த கூடத்தில் கட்டப்பட்டிருந்து இளவயது பசுமாடு ஒன்று திடீரென முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

கட்டப்பட்டிருந்த இடத்தை முரட்டுத்தனமாக சுற்றி வந்த அந்த மாடு, கடைசி நிமிடத்தில் கயிற்றை அறுத்துக்கொண்டு அங்கிருந்து திமிறிக்கொண்டு வெளியே ஓடியுள்ளது.

இதனைக்கண்ட ஊழியர்கள் மாட்டை பிடிக்க அதனை பின் தொடர்ந்து துரத்தியுள்ளனர். பல இடங்களை சுற்றிய அந்த மாடு இறுதியாக ஒரு மருத்துவமனை அருகில் நின்றது.

மாட்டை பின் தொடர்ந்த வந்த ஊழியர்கள், அதற்கு தெரியாமல் துப்பாக்கி முனையில் மாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.

இந்த மயக்க மருந்து தான் மாடு தனது வாழ்நாள் முழுவதும் உயிருடன் இருக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்த விவகாரம் வெளியே கசிய விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த மாட்டு இறைச்சி கூடத்தின் முன் கூடி போராட ஆரம்பித்துள்ளனர்.

‘மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒரு மாட்டின் இறைச்சியை மக்கள் சாப்பிட்டால், அது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்’ என்றனர்.

இது குறித்து பேசிய விலங்குகள் நல ஆர்வலரான Stephane Lamart, மனிதர்களை போல் மாடுகளுக்கும் உணர்வுகளும் மனசாட்சியும் இருக்கிறது.

மாடுகளும் தங்களுக்கு வரும் மரணத்தை முன்கூட்டியே அறிந்துக்கொள்ளும் திறனை தான் இந்த சம்பவம் நிரூபனம் செய்துள்ளது என்றார்.

Stephane Lamart மற்றும் பிரான்ஸ் பாடகரான Stone ஆகியவர் களத்தில் இறங்கி நிதி வசூல் செய்து இறைச்சி கூட உரிமையாளருக்கு சுமார் 2000 யூரோக்களை வழங்கியுள்ளனர்.

இந்த தொகையின் ஒரு பகுதியை கொண்டு, தப்பித்து சென்ற அந்த மாட்டை பாரீஸில் ஒரு பாதுகாப்பான கொண்டு சென்று விட வேண்டும் என்பது அவருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை ஆகும்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்த பசுமாடு கன்றை ஈன்றதும் அதனுடன் வாழ்நால் முழுவதும் சேர்ந்து வாழ ஏற்பாடுகள் செய்யப்படும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE