மாத்தளையில் இன்றும் ஒருதொகுதி துப்பாக்கிகள் மீட்புமாத்தளையில் இன்றும் ஒருதொகுதி துப்பாக்கிகள் மீட்பு

230

 

மாத்தளைப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றுமொரு தொகுதி துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தளை கச்சேரிக்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு நேற்று முன்தினம் பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட அத்திவாரம் தோண்டும் பணிகளின் போது பெருமளவிலான துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

அந்த இடத்துக்கு அருகிலுள்ள மற்றொரு பகுதியிலிருந்தே இன்றும் துப்பாக்கிகள் மீண்டும் மீட்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் பல வருடங்கள் பழைமை வாய்ந்த, துருப்பிடித்த நிலையில் காணப்படுவது போன்றே இன்று கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களும் அதே காலப் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

SHARE